நடிகர் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மாரி 2'. பாலாஜி மோகன் இயக்கிய இத்திரைப்படத்தில் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா பணியாற்றினார்.
இப்படத்தில் இடம்பெற்ற 'ரவுடி பேபி' பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. இந்நிலையில், யூ-டியூப் தளத்தில் வெளியான இப்பாடல் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது. அந்தவகையில் தற்போது வரை இந்தப் பாடல் யூ-டியூப்பில் 900 மில்லியன் வியூவ்ஸ் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.