நடிகர் தனுஷ்-சாய் பல்லவி நடித்த 'மாரி-2' திரைப்படம், கடந்த வருடம் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியானது. முதல் பாகத்தை இயக்கிய பாலாஜி மோகனே, இப்படத்தையும் இயக்கியுள்ளார். இப்படத்தில் கிருஷ்ணா, வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், ராகவன், டோவினோ தாமஸ் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார்.
'ரவுடி பேபி' பாடலுக்கு நடனம்; நவ்யா நாயரை கலாய்த்த நெட்டிசன்கள்! - ரவுடி பேபி
"ரவுடி பேபி பாடலுக்கு நடனம் ஆடி எங்களை கொலை செய்யாதீர்கள்" என்று, நடிகை நவ்யா நாயர் மீது நெட்டிசன்கள் கொந்தளித்துள்ளனர்.
!['ரவுடி பேபி' பாடலுக்கு நடனம்; நவ்யா நாயரை கலாய்த்த நெட்டிசன்கள்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2744345-691-ca91573d-34e8-4641-91cf-14117535ace0.jpg)
'மாரி-2' படத்தில் இடம்பெற்ற 'ரவுடி பேபி' பாடல் சிறியவர் முதல் பெரியவர் வரை ஆட்டம் போட வைத்து பட்டி தொட்டியெங்கும் கலக்கியது. சாய் பல்லவியும், தனுஷும் சேர்ந்து ஆடிய ஆட்டத்தை பார்த்து பலரும் வியந்து பாராட்டினர். இந்த பாட்டிற்கு நடனப்புயல் பிரபு தேவா நடனம் அமைத்திருந்தார். 'ரவுடி பேபி' பாடல் கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்து உலக அளவில் டிரெண்டாகி பல சாதனைகளை படைத்து வருகிறது. யூடியூப்பில் அதிகபேர் பார்த்த பாடல் என்ற சாதனையும் படைத்துள்ளது.
இந்நிலையில் மலையாள நடிகை நவ்யா நாயர் 'ரவுடி பேபி' பாடலுக்கு ஆடிய வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது. நடன பயிற்சி எடுக்கும் இடத்தில் இந்த பாடலுக்கு அவர் நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், நவ்யா நாயரை கடுமையாக விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர். 'தயவு செய்து நடனம் ஆட வேண்டாம் என்றும் நீங்கள் ஆடுவது டான் மாஸ்டர் பிரபுதேவாவை கலங்கப்படுத்துவது போன்று இருக்கிறது' என்று கிண்டல் செய்திருந்தனர். மேலும், சமூக வலைதளங்களில் சாய் பல்லவியுடன், நவ்யா நாயரை ஒப்பிட்டு பல்வேறு கமெண்ட்களை அள்ளி தெளித்து வருகின்றனர்.