'தரமணி' பட நடிகர் வசந்த் ரவி, ரவீனா, பாரதி ராஜா, சரண்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'ராக்கி' திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.
’ராக்கி' படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் ரிலீஸுக்குத் தயாராக உள்ளது. இப்படத்தின் வெளியீட்டு உரிமையை, 'ரவுடி பிக்சர்ஸ்' சார்பாக நயன்தாராவும் - விக்னேஷ் சிவனும் வாங்கியுள்ளனர்.