தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

Valimai update:'வலிமை' திரையரங்கு உரிமையைக் கைப்பற்றிய நிறுவனம் எது? - kollywood latest cinema news

நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியாகவுள்ள வலிமை திரைப்படத்தின் திரையரங்கு உரிமைக்கு கடும் போட்டி நிலவிய நிலையில், உரிமையைக் கைப்பற்றிய நிறுவனம் எது என்பது தொடர்பான தகவலைக் கீழே காணலாம்.

'வலிமை' திரையரங்கு உரிமையைக் கைப்பற்றிய நிறுவனம் எது?
'வலிமை' திரையரங்கு உரிமையைக் கைப்பற்றிய நிறுவனம் எது?

By

Published : Dec 2, 2021, 5:58 PM IST

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள திரைப்படம் 'வலிமை'. அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

வலிமை படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஓயாமல் அப்டேட் கேட்டு நச்சரித்துக் கொண்டிருந்த அஜித் ரசிகர்களுக்கு, வலிமை அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கெனவே இன்பஅதிர்ச்சி கொடுத்திருந்தார் போனிகபூர்.

பின், இத்திரைப்படத்தின் டீசர், முதல் பாடல் ஆகியவை வெளியாகியிருந்தன. பின்னர் நேற்று (டிச.3) மாலை படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் தற்போது வலிமை திரைப்படத்தின் நார்த் மற்றும் சவுத் ஆர்காட் திரையரங்கு உரிமையை ராக்போர்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திரையரங்கு உரிமையைக் கைப்பற்ற நிறுவனங்களுக்கிடையே கடும் போட்டி நிலவியதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:தேர்தலில் போட்டியிடும் திரைப்பட இயக்குநர் யார்?; பரபரப்பான ரசிகர்கள்!

ABOUT THE AUTHOR

...view details