தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

படப்பிடிப்பிற்குத் தயாரான ராபர்ட் பாட்டின்சனின் 'தி பேட்மேன்' - ராபர்ட் பாட்டின்சன் பேட்மேன்

வாஷிங்டன்: ராபர்ட் பாட்டின்சனின் நடிப்பில் உருவாகி வரும் சூப்பர் ஹீரோ படமான 'தி பேட்மேனின்' எஞ்சிய காட்சிகள் செப்டம்பர் தொடக்கத்தில் மீண்டும் படமாக்கப்படயிருக்கிறது.

ராபர்ட் பாட்டின்சன்
ராபர்ட் பாட்டின்சன்

By

Published : Aug 20, 2020, 1:50 PM IST

டிசி தனது 'பேட்மேன்' திரைப்படத் தொடரை மீள் உருவாக்கம் செய்யவுள்ள நிலையில் இயக்குநர் மேட் ரீவ்ஸ் இயக்கும் இந்தத் திரைப்படத்தில் ராபர்ட் பேட்டின்சன் பேட்மேனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆரம்பத்திலேயே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது.

கரோனா தொற்று அச்சம் காரணமாக படப்பிடிப்புத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கயிருக்கிறது.

இங்கிலாந்திலுள்ள லீவ்ஸ்டன் வார்னர் பிரதர்ஸ் ஸ்டூடியோவில் படப்பிடிப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்தத் திரைப்படம் 'டார்க் நைட்' திரைப்படத்தின் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டும், பல வில்லன்களைக் கொண்ட கதையாகவும் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. ராபர்ட் பேட்டின்சனோடு, ஜோயி க்ரேவிட்ஸ் கேட் உமனாக இப்படத்தில் தோன்றவுள்ளார்.

படப்பிடிப்பிற்காக தற்போது வார்னர் பிரதர்ஸ் ஸ்டூடியோவில் செட் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மூன்று மாத காலத்துக்குள் தொடர்ந்து படப்பிடிப்பை முடிக்கும் வகையில் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இந்தப் படத்தில் பால் டானோ, ஜான் டர்டுரோ, செர்கிஸ், கொலின் ஃபாரெல் உள்ளிட்டோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியாகவிருந்த இப்படம் தற்போது 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் எனத் தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details