தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மிருகங்களுடன் பேசும் 'ஜுனியர் ராபர்ட் டவுனி'யின் 'டூலிட்டில்' - போஸ்டர்கள் வெளியீடு - ஜுனியர் ராபர்ட் டவுனி

ஜுனியர் ராபர்ட் டவுனி நடிப்பில் திரைக்கு வரவுள்ள 'டூலிட்டில்' ஹாலிவுட் நகைச்சுவை படத்தின் புதிய போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

Dolittle
Dolittle

By

Published : Dec 17, 2019, 9:35 AM IST

ஜுனியர் ராபர்ட் டவுனி நடிப்பில் ஸ்டீபன் ககன் இயக்கும் ஃபேன்டசி காமெடி திரைப்படம் 'டூலிட்டில்'.
தாமஸ் ஷெப்பர்ட் எழுதிய கதையிலிருந்து ஹக் லோஃப்டிங் உருவாக்கிய டாக்டர் டூலிட்டில் என்ற கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த கார்டூன் திரைப்படத்தில் அந்தோணியோ பந்தேரஸ், மைக்கேல் ஷீன், எம்மா தோம்சன், ரமி மாலெக், ஜான் சீனா உள்ளிட்டோர் கார்டூன் கதாபாத்திரங்களுக்குப் பின்னணி குரல் கொடுத்துள்ளனர்.

175 மில்லியன் டாலர் செலவில் உருவாகிவரும் இந்தப் படத்தை மீடியா ரைட்ஸ் கேட்பிடல், டீம் டவுனி உள்ளிட்ட நிறுவனங்கள் தயாரித்துள்ளன. இந்தப் படம் உலகம் முழுவதும் வரும் ஜனவரி 17ஆம் தேதி திரைக்கு வருகிறது.

கடந்த அக்டோபரில் இதன் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது கதாபாத்திரங்களின் புதிய போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படமானது ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்தியாவில் வெளியாகவுள்ளது.

நாய், பனிக்கரடி, புலி, மக்காவ் கிளி உள்ளிட்ட விலங்குகள் மற்றும் பறவையுடன் ஜுனியர் ராபர்ட் டவுனி அடிக்கும் லூட்டி, சாகசங்களை சித்தரிக்கும் வகையில் புதிய போஸ்டர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க...

'தனாஜி: தி அன்சங் வாரியர்' - 2ஆவது ட்ரெய்லர் வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details