தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இந்தியன் 2 விபத்து: காவல் ஆணையரை சந்தித்து கோரிக்கைவிடுத்த ஆர்.கே. செல்வமணி! - இந்தியன் 2 விபத்து

இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என சென்னை மாநகர காவல் துறை ஆணையரை சந்தித்து பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி கோரிக்கைவிடுத்துள்ளார்.

இந்தியன் 2 விபத்து
இந்தியன் 2 விபத்து

By

Published : Feb 22, 2020, 10:03 PM IST

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் படம் 'இந்தியன் 2'. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் உள்ள ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது. அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் படக்குழுவைச் சேர்ந்த மூன்று நபர்கள் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் படக்குழு மட்டுமின்றி அனைவரிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதனை பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி நேரில் சந்தித்துள்ளார். அந்தத் சந்திப்பில், விபத்து நடந்த விவகாரம் தொடர்பாகவும் எவ்வாறு நடந்தது என்பது தொடர்பாகவும் பேசியதாகக் கூறப்படுகிறது.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக விரிவான, நேர்மையான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்.கே. செல்வமணி, சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதனிடம் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இதையும் படிங்க:ஏர் இந்தியா நிறுவனம் மீது கிரிதி கர்பந்தா காட்டம்; காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details