தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மலையாள ரீமேக் படத்திற்காக முரட்டு அவதாரம் எடுக்கும் ஆர்.கே. சுரேஷ் - ஜோசப் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் ஆர்.கே.சுரேஷ்

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'ஜோசப்' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் ஆர்.கே. சுரேஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

rk-suresh
rk-suresh

By

Published : Jan 25, 2020, 10:47 AM IST

இயக்குநர் பாலாவின் 'தாரை தப்பட்டை' படம் மூலம் வில்லன் நடிகராக அறிமுகமான ஆர்.கே. சுரேஷ், மருது, ஸ்கெட்ச், பில்லா பாண்டி, நம்ம வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இது தவிர சில மலையாளப் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

இதனிடையே மலையாளத்தில் 2018இல் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'ஜோசப்' என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் ஆர்.கே. சுரேஷ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஜோஜு ஜோர்ஜ் நடித்த ஜோசப் திரைப்படம்

கொலையை மையமாக வைத்து சஸ்பென்ஸ் திரில்லர் கதைக்களத்தில் வெளியாகியிருந்த இந்தப்படத்தை மலையாள இயக்குநர் எம். பத்மகுமார் இயக்கியிருந்தார்.

ஜோஜு ஜோர்ஜ் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தின் இயக்குநர் திலீஷ் போத்தன், ஆத்மியா ராஜன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.

தற்போது இந்தப்படத்தை தமிழில் இயக்குநர் பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. மலையாள இயக்குநர் எம். பத்மகுமார் இந்தப் படத்தையும் இயக்குகிறார்.

ஆர்.கே. சுரேஷ்

ஆர்.கே.சுரேஷ் இதுவரை ஏற்காத புதுக்கதை என்பதால் அதற்காக உடலளவிலும், மனதளவிலும் தன்னைத் தயார் படுத்தி வருகிறார். இப்படத்தில் இரண்டு தோற்றங்களில் நடிக்கும் அவர், 73 கிலோ எடையில் இருந்து தற்போது 95 கிலோ எடை வரை கூட்டி வியப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அதுதொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள ஆர்.கே.சுரேஷுக்கு ரசிகர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் 'வன்முறை' படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும், 'கொச்சின் ஷாதி சென்னை 03' என்ற மலையாளப் படமும் இந்த ஆண்டு வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க...

‘துப்பாக்கி’ பட வில்லனின் 'குதா ஹாஃபிஸ்' - லக்னோவில் படப்பிடிப்பு

ABOUT THE AUTHOR

...view details