தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமான ஆர்.கே. சுரேஷ், ‘தாரை தப்பட்டை’ திரைப்படம் மூலம் நடிகராக அவதாரம் எடுத்தார். இதையடுத்து இவர் ’மருது’, ’பில்லா பாண்டி’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
இந்நிலையில், இவருக்கும் பைனான்சியரான மது என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. அதில் இருவீட்டாரின் குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.