தமிழ் சினிமாவிற்கு பல எதார்த்த படைப்புகளை தந்து திரை ரசிகர்களை மகிழ்ச்சி மழையில் ஆழ்த்துபவர் இயக்குனர் வெங்கட் பிரபு. இவர் இயக்கிய படங்களான சென்னை-28, கோவா, சரோஜா போன்ற படங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. அஜித்தின் 50-வது படமான மங்காத்தா எனும் மாபெரும் வெற்றி படத்தை தந்த பெருமையும் இவரையே சேரும்.
'ஆர் கே நகர்' தொகுதியில் போட்டியிடும் வைபவ் - வைபவ்
இயக்குனர் வெங்கட் பிரபு தயாரிப்பு நிறுவனமான பிளாக் டிக்கெட் தயாரிப்பில் ‘ஆர்.கே.நகர்’ படத்தின் வெளியிடும் தேதியை விரைவில் வெங்கட் பிரபு அறிவிக்க உள்ளார்.
இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு தனது பிளாக் டிக்கெட் கம்பெனி நிறுவனம் சார்பில் நடிகர் வைபவை வைத்து ‘ஆர்.கே.நகர்’ என்ற படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தை ‘வடகறி’ படத்தை இயக்கிய சரவண ராஜன் இயக்கியுள்ளார். இதில் வைபவுக்கு ஜோடியாக சானா அல்தாப் நடித்திருக்கிறார். மேலும், சம்பத், இனிகோ பிரபாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரேம்ஜி இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் நடந்து வந்தது.
தற்போது இப்படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் பிரபு அறிவித்திருக்கிறார். மேலும் தேர்தல் தேதி (படம் ரிலீஸ் தேதி)-யை விரைவில் அறிவிக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார்.