அமித் ரவீந்திரநாத் ஷர்மா இயக்கத்தில் 2018ஆம் ஆண்டு வெளியான பாலிவுட் திரைப்படம் 'பதாய் ஹோ'. ஆயுஷ்மான் குரானா, நீனா குப்தா, கஜ்ராஜ் ராவ் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
தற்போது இந்த படத்தின் தமிழ் ரீமேக்கை ஆர்.ஜே பாலாஜி இயக்கி நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு 'வீட்ல விசேஷங்க' என்ற தலைப்பு வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இந்த தலைப்பில் பாக்யராஜ் படம் இயக்கியுள்ளதால் அவரிடம் 'வீட்ல விசேஷங்க' பட தலைப்பு உரிமை குறித்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவுற்றதாக தெரிகிறது. விரைவில் ஆர்.ஜே பாலாஜியுடன் நடிக்கும் நடிகை, இதர கதாபாத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.