’நானும் ரௌடி தான்’, ‘தேவி’ என சில படங்களில் காமெடியனாக நடித்த ஆர்.ஜே. பாலாஜி, ‘எல்கேஜி’ (LKG) படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்தார். அவரே கதை, திரைக்கதை எழுதிய இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்நிலையில் வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘பப்பி’ படத்துக்காக பாடகராக மாறியிருக்கிறார் ஆர்.ஜே. பாலாஜி.
#SoththuMootai: டயட் இருக்குறவங்கலாம் இந்தப் பாட்டுக்கு எதிரா கேஸ் போடுங்க - ஆர்.ஜே. பாலாஜி - பப்பி
‘பப்பி’ படத்துக்காக பாடகர் அவதாரம் எடுத்துள்ள ஆர்.ஜே. பாலாஜி தனது பாடல் மீது வழக்கு தொடுக்கச் சொல்லியிருக்கிறார்.
வருண், சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘பப்பி’ திரைப்படத்தை அறிமுக இயக்குநர் மொரட்டு சிங்கிள் இயக்கியுள்ளார். தரண் குமார் இசையில் ஆர்.ஜே. பாலாஜி இந்தப் படத்தில் #SoththuMootai (சோத்து மூட்டை) என்ற பாடலை பாடியுள்ளார். இந்தப் பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான புரொமோ வீடியோவில் ஆர்.ஜே. பாலாஜி, நிறைய சாப்பாட்டு கடை, நிறைய சாப்பாட பத்தின பாட்டு இது, அதனால் டயட் இருக்கவங்க இதுக்கு எதிரா சர்ச்சை பண்ணுங்க, கேஸ் போட்டு பாட்ட வைரலாக்குங்க என கலாய்த்துள்ளார்.