தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

HBD ரித்விகா: தனித்துவ நடிப்பால் கோலிவுட்டில் கவனம் ஈர்த்த 'மெட்ராஸ்'காரி! - ரித்விகா பிறந்தநாள்

கபாலியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் திரையில் தோன்றிய ரித்விகா, பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்த 'ஒருநாள் கூத்து' படத்திலும் தன் தனித்துவமான கதாபாத்திரத்தின் மூலம் கவனம் ஈர்த்தார்.

ரித்விகா
ரித்விகா

By

Published : Aug 5, 2021, 7:16 AM IST

தமிழ் சினிமாவில் வெகு சில நடிகர்களே குணச்சித்திர கதாபாத்திரங்களை சிறப்பாகக் கையாண்டு ரசிகர்களை தன் வசமாக்குவர். அவர்களுள் ஒருவர்தான் நடிகை ரித்விகா.

பாலாவின் 'பரதேசி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரித்விகா, ரஞ்சித்தின் 'மெட்ராஸ்' படத்தின் மூலம் கோலிவுட்டில் கவனம் ஈர்க்கத் தொடங்கினார். அன்புவின் மனைவி மேரியாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மெட்ராஸ்காரியாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தார் ரித்விகா.

ரித்விகா

கபாலியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் திரையில் தோன்றிய ரித்விகா, பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்த 'ஒருநாள் கூத்து' படத்திலும் தன் தனித்துவமான கதாபாத்திரத்தின் மூலம் கவனம் ஈர்த்தார்.

ரித்விகா

'பிக் பாஸ் - சீசன் 2' பிற சீசன்களைக் காட்டிலும் பெரிய வெற்றி பெறாவிட்டாலும், ரித்விகாவின் வெற்றி ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது.

தற்போது ஆந்தாலஜி படமான 'நவரசா'வில் அரவிந்தசாமி இயக்கியுள்ள 'ரௌத்திரம்' படத்தில் ரித்விகா நடித்துள்ளார். இப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

ரித்விகா

கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இதே போன்ற கதாபாத்திரங்களை தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடித்து, கோலிவுட் ரசிகர்களின் மனதில் நிரந்தரமாக சிம்மாசனமிட்டு அமர, 'மெட்ராஸ்காரி' ரித்விகாவை அவரது பிறந்த நாளான இன்று ஈடிவி பாரத் வாழ்த்துகிறது.

இதையும் படிங்க:மற்ற விளையாட்டு வீரர்களை விட நான் அதிர்ஷ்டசாலி - பி.வி.சிந்து நெகிழ்ச்சி

ABOUT THE AUTHOR

...view details