தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மண்டபம் கொடுக்க மறுத்தாரா லதா ரஜினிகாந்த்? -மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அகமது விளக்கம்!

சென்னை: லதா ரஜினிகாந்த் ராகவேந்திரா திருமண மண்டபத்தை கரோனா சிகிச்சைக்காக தர மறுத்ததாக வெளியான செய்தி குறித்து மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அகமது விளக்கம் கொடுத்துள்ளார்.

லதா ரஜினிகாந்த்
லதா ரஜினிகாந்த்

By

Published : May 5, 2020, 3:11 PM IST

சென்னையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவரிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வருவதால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் திருமண மண்டபங்களை கரோனா வைரஸ் சிகிச்சை மையத்திற்காக மற்றப்பட்டு வருகிறது. நடிகர் ரஜினிகாந்தும் தனது ராகவேந்திரா மண்டபத்தை கரோனா சிகிச்சைக்கு தருவதாக அறிவுத்தார்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகாக, சென்னையில் 50 ஆயிரம் படுக்கைகளை தயார் செய்ய திருமண மண்டபங்களை உரிமையளர்கள் ஒப்படைக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியதாக மாநகராட்சி ஆனையர் பிரகாஷ் அறிவித்தார்.

மேலும் திருமண மண்டபங்கள் அனைத்தும் கரோனா வைரஸால் பாதிக்கபட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் வார்டுகளாக மாற்றப்படும் என்று தெரிவித்தார்.

ஆனால் நோட்டீஸ் வெளியான பிறகு லதா ரஜினிகாந்த் 'மண்டபத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், அடுத்த மூன்று மாதங்களுக்கு மண்டபத்தில் எந்த நிகழ்வுகளும் நடைபெறாது” என கூறியதாக செய்திகள் வெளியாகின. இதனையடுத்து பலரும் ரஜினிகாந்த்தை சமூக வலைதளங்களில் கடுமையாக சாடி வந்தனர்.

இந்நிலையில் இச்செய்தி வதந்தி என்று யாரும் இதை நம்ப வேண்டாம் என்று ரஜினிகாந்தின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ”ராகவேந்திரா திருமண மண்டபம் பராமரிப்பு பணியில் இருப்பதால், லதா ரஜினிகாந்த் மண்டபத்தை தர மறுத்துவிட்டார் என்று வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது. அப்படி எதுவும் லதா ரஜினிகாந்தால் சொல்லப்படவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:ஊதியத்தை குறைத்த விஜய் ஆண்டனி

ABOUT THE AUTHOR

...view details