தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சைமா விருதை தட்டிச் சென்ற ரிது வர்மா! - சினிமா செய்திகள்

தமிழில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்துக்காக, சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருதை ரிது வர்மா தட்டிச் சென்றார்.

ரிது வர்மா
ரிது வர்மா

By

Published : Sep 25, 2021, 4:56 PM IST

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் எனப்படும் சைமா விருதுகள், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நடிகர், நடிகையர்களை தேர்வு செய்து வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகர்களுக்கு சைமா விருது வழங்கும் விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது.

சிறந்த அறிமுக நடிகை ரிது வர்மா

இதில் கடந்த 2020ஆம் ஆண்டு தமிழில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் வெளியான, “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” திரைப்படத்தில் நடித்த ரிது வர்மாவுக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருது வழங்கப்பட்டுள்ளது.

துல்கர் சல்மான், ரக்‌ஷன், சிவரஞ்சனி, இயக்குநர் கவுதம் மேனன் என பலரும் நடித்திருந்த இந்த திரைப்படம், இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது.

திரைப்படத்தில் ரிது வர்மாவின் இயல்பான நடிப்பும், மயங்கச் செய்யும் அழகும் அவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியது. ஏற்கனவே தெலுங்கு ரசிகர்களை நடிப்பில் கட்டிப்போட்ட ரிது வர்மா, தற்போது தமிழ் திரைப்படத்துக்காக விருது வென்றுள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

இதையும் படிங்க:அப்பாவுக்கு விருது- நன்றி தெரிவித்த விவேக் மகள்

ABOUT THE AUTHOR

...view details