பாலிவுட் நடிகர் ரித்திஷ் தேஷ்முக் ஹைதராபாத்துக்கு விமானம் மூலம் வந்தார். அப்போது விமானநிலையத்தில் மின்வெட்டு காரணமாக லிஃப்ட் இயங்கவில்லை. இதனால் அவரச வழியை பயன்படுத்தியபோது அதுவும் சங்கிலியால் பிணைத்துப் பூட்டப்பட்டிருந்தது.
மின் வெட்டால் அவதிப்பட்ட பாலிவுட் நடிகர்! - ரித்திஷ் தேஷ்முக்
பாலிவுட் நடிகர் ரித்திஷ் தேஷ்முக்கின் ட்விட்டர் பதிவுக்கு விமான நிலைய அலுவலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ரித்திஷ் தேஷ்முக் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், "ஏதேனும் அவசரம் எனில், இங்கு காத்திருப்பது சோகத்தில் முடியும். அலுவலர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இவரது இந்த பதிவுக்கு பதிலளித்துள்ள விமான நிலைய நிர்வாகிகள், அவருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும் சிறிய தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே வழிகள் பூட்டப்பட்டிருந்ததாகவும், சில நிமிடங்களிலேயே அவை சரிசெய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.