ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகில் பழம்பெரும் நடிகரான கிருஷ்ணாவின் மூத்த மகனான நடிகர் கட்டமனேனி ரமேஷ் பாபு நேற்று(ஜனவரி 8) உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
அவரது மறைவுக்குத் திரையுலகப்பிரபலங்கள், ரசிகர்கள் எனப்பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அண்ணன் மறைவு குறித்து நடிகர் மகேஷ் பாபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நீங்கள் எனக்கு மிகவும் உத்வேகமாக இருந்தீர்கள். நீங்கள் என் பலமாக இருந்தீர்கள். எனக்கு தைரியம் தரும் நபராக இருந்தீர்கள். எனக்காக நீங்கள் செய்த அனைத்திற்கும் நன்றி.
இப்போது ஓய்வெடுங்கள். உங்களை எப்போதும் நான் நேசிக்கிறேன். இந்த வாழ்க்கையிலும் சரி, எனக்கு இன்னொரு வாழ்க்கை இருந்தாலும் எப்போது நீங்கள் தான் என் அண்ணய்யா" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:'புத்தாண்டு பாசிடிவ் ரிசல்ட்டுடன் தொடங்கியுள்ளது' - விஷ்ணு விஷால் உருக்கம்