தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ரம்யா நம்பீசனுடன் இணையும் ரியோ ராஜ்! - ரியோ ராஜ் ரம்யா நம்பீசன்

சென்னை: 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' வெற்றியைத் தொடர்ந்து பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் முழு நீள நகைச்சுவைப் படத்தில் ரியோ ராஜ் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Rio raj

By

Published : Nov 16, 2019, 3:37 PM IST

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகப் பணியாற்றிவருபவர் ரியோ ராஜ். இவர் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ரியோ ராஜ் அடுத்ததாக இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் நகைச்சுவை படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இவர் அதர்வாவுடன் 'பானா காத்தாடி', 'செம போதை ஆகாதே' ஆகிய படங்களை இயக்கியவர்.

இந்தப் படத்தில் ரியோவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கவுள்ளதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும், முதல் முறையாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா முழு நீள நகைச்சுவைப் படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

இது குறித்து படக்குழுவினர் கூறுகையில், "செல் நம்பர் 1 என்று பெயர் தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், இன்றைய காலகட்டத்தில் அதீத அழுத்தமிக்க மனநிலையிலிருந்து விடுதலை பெற, பொழுதுபோக்கு காமெடி படங்களையே மக்கள் அதிகளவில் விரும்புகின்றனர். இந்த வகையில் 90 கிட்ஸ், 2K கிட்ஸ் என இரு தரப்பையும் ஒருங்கே கவரும் வகையில் முழுநீள நகைச்சுவை படமாக இந்தப் படம் உருவாக உள்ளது" எனத் தெரிவித்தனர்.

படக்குழு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ போஸ்டர்

ரியோ ராஜ், ரம்யா நம்பீசனுடன் எம்.எஸ். பாஸ்கர், சந்தான பாரதி, பால சரவணன், ரேகா, லிவிங்ஸ்டன், விஜி சந்திரசேகர், ரோபோ சங்கர், முனீஸ்காந்த், ஆடுகளம் நரேன், ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளனர்.

இதையும் படிங்க: ஐஸ்வர்யா ராஜேஷின் ‘மிஸ்மேட்ச்’ வெளியாகும் தேதி அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details