நடிகரும், தொகுப்பளருமான ரியோ ராஜ், தமிழ் சினிமாவில் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படம் மூலம் கதாநாயகனாக வெள்ளி திரையில் அறிமுகமானார். இவர் படங்களில் நடிப்பதற்கு முன்பே, தனது நெடுநாள் காதலியான ஸ்ருதியை திருமணம் செய்து கொண்டார்.
ரியோ சமீபத்தில் தனது மனைவி ஸ்ருதி கர்ப்பமாக இருப்பதாகக் கூறி புகைப்படத்தை வெளியிட்டார். இந்நிலையில் ரியோவிற்கு இன்று அதிகாலை பெண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து ரியோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''என் உலகத்தை ஆட்சி செய்ய ஒரு இளவரசி வந்துவிட்டாள். ஆம் எனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலம்'' என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.