தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

’டிரான்ஸ்ஃபார்ம் இந்தியா’ குறும்படத்தை பிரமோட் செய்யும் பாலிவுட் இளம் ஜோடி! - டிரான்ஸ்ஃபார்ம் இந்தியா

’டிரான்ஸ்ஃபார்ம் இந்தியா’ குறும்படத்தை ரிச்சா சாதா மற்றும் அலி ஃபசல் ஆகிய நடிகர்கள் பிரமோட் செய்து வருகின்றனர்.

ரிச்சா சாதா
ரிச்சா சாதா

By

Published : Aug 16, 2020, 8:41 PM IST

கிராமப்புற பொருளாதாரப் புரட்சியை மையமாகக் கொண்டு ’டிரான்ஸ்ஃபார்ம் இந்தியா’ என்ற குறும்படம் உருவாகியுள்ளது. சமூக ஆர்வலர் மாயங்க் காந்தி இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ரிச்சா சாதா, அலி ஃபசல் ஆகிய நடிகர்கள் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளனர்.

இது குறித்து பேசிய ரிச்சா, "இந்தக் குறும்படத்தை நான் விளம்பரப்படுத்துவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தக் குறும்படம் உருவாகியுள்ளது" என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து, இப்படம் குறித்து பேசிய அலி, "இக்குறும்படத்தை நான் விளம்பரப்படுத்தி வருவதற்கான காரணம் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் உள்ள மராத்வாடாவின் வறட்சி சம்பவத்தை இதில் இயக்குநர் தத்ரூபமாகக் காண்பித்துள்ளார்" என்று பேசியுள்ளார்.

2012ஆம் ஆண்டில் ஃபுக்ரே படத்தின்போது அலியும் ரிச்சாவும் நண்பர்களாகப் பழகி வந்த நிலையில், பிறகு காதலில் விழுந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details