தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ரோஜாவின் திருஷ்டி பொம்மையா பாலகிருஷ்ணா: ராம் கோபால் வர்மா சர்ச்சை கருத்து - பாலகிருஷ்ணாவை வம்புக்கு இழுத்த ராம் கோபால் வர்மா

நடிகை ரோஜா பக்கத்தில் அமர்ந்திருந்த நடிகர் பாலகிருஷ்ணா அவருக்கு திருஷ்டி பொம்மை போன்று இருப்பதாக சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்ற பதிவிட்டுளளார்.

Roja
Roja

By

Published : Jan 22, 2020, 11:34 PM IST

தெலுங்கு, இந்தி சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் ராம்கோபால் வர்மா. இவர் தெலுங்கிலுள்ள முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். சமூக வலைதளங்களில் அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளைக் கூறி, பிரச்னைக்குள் சிக்கி நெட்டிசன்களிடம் வறுபடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் இவர், டாப் நடிகர்களான அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி உட்பட சினிமாவைச் சேர்ந்த பலரையும் கடுமையாக விமர்சித்து வாங்கிக் கட்டிக்கொண்டவர்.

ஒரு காலத்தில் நல்ல சினிமாக்களை கொடுப்பதில் மட்டுமே பெயர் பெற்றிருந்த இவர், தொடர் தோல்விகளை சந்தித்து, தற்போது மற்றவர்களின் படைப்புகளை விமர்சித்து வருகிறார். இந்நிலையில், தற்போது தனது சமூக வலைதளமான ட்விட்டரில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அது நடிகை ரோஜா, நடிகர் பாலகிருஷணாவுடன் செல்ஃபி எடுக்கும் புகைப்படம்.

இந்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்ட வர்மா, ரோஜா பார்ப்பதற்கு ஹீரோ போன்று இருக்கிறார். ஆனால் அவரது வலது புறம் இருக்கும் நபர் அந்த போட்டோவின் அழகை கெடுக்கிறார். ஒருவேளை அவர் தான் ரோஜாவின் திருஷ்டி பொம்மையா என்று ட்வீட் செய்துள்ளார்.

அவரது வலது புறம் இருக்கும் நபர் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா. தற்போது மொட்டை அடித்து மீசை வைத்துள்ளார். புதிய படத்திற்காக இந்த கெட்டப்பில் இருக்கிறாரா என்பது விரைவில் தெரியவரும். ராம் கோபால் வர்மாவின் இந்த ட்வீட்டால் ரசிகர்கள் வழக்கம் போல் அவரை வசைபாடியும் ஆதரவளித்தும் வருகின்றனர்.

ஏற்கனவே ட்விட்டரில் தெலுங்கு சினிமா ரசிகர்கள் #TeluguRealHeroes என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கியும் தமிழ் ரசிகர்கள் #UnrivalledTamilActors என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கியும் சண்டையிட்டு வருகின்றனர்.

இதையும் வாசிங்க:'ரோஜா'வுடன் மீண்டும் இணையும் அரவிந்த்சாமி!

ABOUT THE AUTHOR

...view details