கரோனா வைரஸ் குறித்தும் அதனால் ஏற்பட்டுள்ள தேசிய ஊரடங்கு உத்தரவு குறித்தும் இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது ட்வீட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
திரைப்படம், அரசியல், விளையாட்டு என அன்றாட நிகழ்வுகளை வைத்து சர்ச்சையான ட்வீட்டுகளை பதிவிட்டு ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொள்பவர் இயக்குநர் ராம் கோபால் வர்மா. தற்போது உலகம் முழுவதும் கரோனா பீதி தொற்றிக்கொண்டிருக்கும் நிலையில், அதுதொடர்பான கருத்துகள், வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
இந்தியாவில் அதிகரித்து வரும் கரோனா தொற்று காரணமாக தேசிய ஊரடங்கு உத்தரவையடுத்து அதற்கான காரணம் என்ன என்பதையும் தனது ட்விட்டர் பக்கத்தில் ராம் கோபால் வர்மா கூறியுள்ளார்.
அதில், சில மனைவிமார்கள் கடவுளிடம் பிரத்தனை செய்து இந்த வைரஸை வரவைத்துள்ளதாக நான் நினைக்கிறேன். அதற்கு காரணம் 1. விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. 2. பார் - பப்கள் மூடப்பட்டது. 3. நண்பர்களுடான சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. 4. அலுவலகத்தில் முக்கியமான வேலை இருக்கிறது என பொய் சொல்ல முடியாது. 5. இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் இப்போது மனைவியுடன் மட்டுமே நேரத்தை செலவிட முடிகிறது என்று பதிவிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாது, தேசிய ஊரடங்கு உத்தரவால் மும்பையில் மக்கள் நடமாட்டம் இல்லாதது குறித்த மற்றொரு ட்வீட்டில், ஐரோப்பிய நாட்டை போலவே மும்பையும் மிக அழகாக இருக்கிறது. இதன் அழகை மக்களாகிய நாம் தான் கெடுக்கிறோம் என்று ட்வீட் செய்துள்ளார்.
கரோனா வைரஸூடன் மனிதரை குறிப்பிட்டும் ட்விட் செய்துள்ளார். அதில் எந்தவொரு மிருகத்தை போலல்லாமல் மனிதன் தனது சொந்த இடத்தில் இல்லாமல், ஆதாயத்திற்காக வெவ்வேறு இடங்களுக்கு பயணிக்கின்றான். இதனால் அங்குள்ள இயற்கை வளத்தை அழித்து விடுகின்றான். இந்த கிரகத்திற்கு மனிதன் தான் நோய். நமக்கு இந்த வைரஸ் எப்படியோ... இந்த கிரத்திற்கு வைரஸ் மனிதன் என்று ட்வீட் செய்துள்ளார்.