பாடகி, நடிகை ஜூலி கார்லாண்ட் வாழ்க்கையைப் பற்றிய கதையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியமைக்காக, சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை முதல் முறையாக வென்றுள்ளார், நடிகை ரெனீ ஜெல்வெகர்.
சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது 'ஜூடி' படத்துக்காக ரெனீ ஜெல்வெகர், 'ஹர்ரியட்' படத்துக்காக சிந்தியா எரிவோ, 'மேரேஜ் ஸ்டோரி' படத்துக்காக ஸ்கார்லெட் ஜோகன்சன், 'பாம்ஷெல்' படத்துக்காக சார்லிஸ் தெரோன், 'லிட்டில் உமன்' படத்துக்காக சாயர்ஸ் ரோனன் ஆகியோர் பரிந்துரைப் பட்டியலில் இருந்தனர்.
இந்தப் போட்டியில் ரெனீ ஜெல்வெகர் ஆஸ்கர் விருதை தட்டிச்சென்றார். இதையடுத்து விருதை பெற்ற பின்னர் ரெனீ பேசும்போது கூறியதாவது: 'ஹீரோக்கள் நம்மை ஒன்றிணைத்திருக்கிறார்கள். நமக்குள் இருக்கும் சிறந்த விஷயங்களைக் கண்டறிந்தவர்தான் நம்மில் இருக்கும் சிறந்த அம்சங்கள், நமக்கு ஊக்கமளித்த விஷயங்களைக் கண்டறிய வேண்டும்' என்று கூறினார்.
ஏற்கெனவே 'ஜூடி' படத்துக்காக சிறந்த நடிகை ஃபாப்டா, கோல்டன் குளோப் ஆகிய விருதுகளையும் வென்றுள்ளார் ரெனீ. இதைத்தொடர்ந்து தற்போது சிறந்த நடிகைக்கான முதல் ஆஸ்கரை கையில் பிடித்தார்.