தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பாக்கியராஜின் 'முந்தானை முடிச்சு' ரீமேக் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! - Actor Sasikumar

சென்னை: திரைக்கதை மன்னன் பாக்கியராஜின் இயக்கத்தில் 1983ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியடைந்த திரைப்படம் 'முந்தானை முடிச்சு'. இப்படம் 37 வருடங்களுக்கு பிறகு மீண்டும்‌ ரீமேக்காகிறது.

முந்தானை முடிச்சு ரீமேக்
முந்தானை முடிச்சு ரீமேக்

By

Published : Feb 28, 2021, 3:15 PM IST

திரைக்கதை மன்னன் பாக்கியராஜ் 1980களில் நடித்த படங்களான சுவர் இல்லாத சித்திரங்கள், இன்று போய் நாளை வா, அந்த ஏழு நாட்கள், முந்தானை முடிச்சு போன்றவை மக்களின் வரவேற்பை அதிகம் பெற்றவை.

முந்தானை முடிச்சு ரீமேக்

அதில், பாக்கியராஜின் இயக்கத்தில் 1983ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியடைந்த திரைப்படம் 'முந்தானை முடிச்சு'. இப்படம் 37 வருடங்களுக்கு பிறகு மீண்டும்‌ ரீமேக்காகிறது.

பாக்கியராஜின் முந்தானை முடிச்சு ரீமேக்
ரீமேக்காகும் இப்படத்தில் சசிகுமார், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, எஸ்.ஆர். பிரபாகரன் இயக்குகிறார். JSB film studios நிறுவனம் சார்பாக JSB சதீஷ் தயாரிக்கும் இப்படத்தின் படபிடிப்பை விரைவில் துவக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. பெரும் வெற்றியடைந்த "சுந்தரபாண்டியன்", விரைவில் திரைக்கு வரவுள்ள "கொம்பு வச்ச சிங்கம்டா' படங்களுக்கு பிறகு மீண்டும் சசிகுமாரும், எஸ்.ஆர். பிரபாகரனும் இணையும் இப்படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என தயாரிப்பாளர் JSB சதீஷ் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details