தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வெளியானது மனி ஹெய்ஸ்ட் கடைசி பாகத்தின் ட்ரைலர் - Released is the trailer for the last part of Money Heist

மனி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸ்-ன் கடைசி பாகத்தின் ட்ரைலர் இன்று வெளியானது.

மனி ஹெய்ஸ்ட்
மனி ஹெய்ஸ்ட்

By

Published : Nov 4, 2021, 12:11 PM IST

நெட்ஃப்ளிக்ஸில் சக்கைப்போடு போட்ட அதிரிபுதிரியாக ஹிட்டடித்த தொடர் மனி ஹெய்ஸ்ட். வங்கி கொள்ளைக்காரர்களின் கதையை மையப்படுத்திய இத்தொடருக்கு உலகம் முழுவதும் மிகப்பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது.

அலெக்ஸ் ரோட்ரிகோ இயக்கிய இத்தொடர் ஆண்டெனா 3 என்ற ஸ்பானிய தொலைக்காட்சி சேனலில் ’லா காஸா டி பாபெல்’ என்ற பெயரில் 2017ஆம் ஆண்டு முதன்முதலில் ஒளிபரப்பானது. மொத்தம் 15 எபிசோடுகளைக் கொண்ட இத்தொடரின் உரிமையை வாங்கிய நெட்ஃபிளிக்ஸ் 22 எபிசோடுகளாக பிரித்து உலகமெங்கும் வெளியிட்டது.

மனி ஹெய்ஸ்ட்

வெளியான 2017ஆம் ஆண்டு முதல் இன்றைய தேதி வரை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசம் இழுத்துக் கொண்டுள்ளது மனி ஹெய்ஸ்ட். அதுமட்டுமின்றி மனி ஹெய்ஸ்ட்டில் இடம்பெற்ற ப்ரொஃபஸர் கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டது. ஒரு வங்கியைக் கொள்ளையடிக்கும் எட்டு கொள்ளையர்களையும், அவர்களை வழிநடத்தும் ப்ரொஃபஸர் என்ற ஒருவரையும் சுற்றி நடக்கும் கதைதான் மணி ஹெய்ஸ்ட்.

மனி ஹெய்ஸ்ட்

இந்தக் கதை டோக்யோ என்ற பெண்ணின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது. இத்தொடரின் ஐந்து சீசன் வெளியாகியுள்ளது. காதல், கொள்ளையில் மாட்டிக் கொள்ளும் சக கொள்ளையர்களை காப்பாற்றுதல் என விறுவிறுப்பான களத்துடன் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

மனி ஹெய்ஸ்ட்

இந்த தொடரின் ஐந்தாவது சீசனின் முதல் பாகம் செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி வெளியானது. இதன் இரண்டாவது பாகம் டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகிறது. இந்த வெப் சீரிஸ்-ன் கடைசி பாகத்தின் ட்ரைலர் இன்று வெளியானது.

இதையும் படிங்க : அதிகாலையில் 'அண்ணாத்த' அதிரடி; மும்பையில் முதல் ஷோவுக்கு குவிந்த ரசிகர்கள்

ABOUT THE AUTHOR

...view details