2016 ஆம் ஆண்டு மார்வெல்லின் தயாரிப்பில் பெனடிக்ட் கம்பெர்பாட்ச் நடிப்பில் வெளியானப் படம் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச். இதன் அடுத்த பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதனை 2021ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி வெளியிட படக்குழு முதலில் முடிவு செய்திருந்தது. ஆனால், இப்படத்தின் வெளியீடு 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஸ்பைடர் மேன் சீரியஸ்களின் ஒரு பகுதியாக டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இருக்கிறது.
கரோனா தொற்று காரணமாக சோனி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் ஸ்பைடர் மேன் படத்தின் இரண்டு பாகங்களின் வெளியிட்டு தேதியை மாற்றிவைத்துள்ளது. இதனால் இப்படத்தின் வெளியீட்டு தேதியையும் தயாரிப்பு தரப்பு மாற்றிவைத்துள்ளது.