இரண்டு நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்று இந்தியாவிற்கு வந்தார். இதையடுத்து அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்த அவருக்கும் அவரது மனைவி மெலனியாவுக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
காந்தி தேசத்திற்கு வரவேற்கிறோம் - ட்ரம்பை வரவேற்ற ரஹ்மான் - அகிம்சை பாடல் மூலம் ட்ரம்பை வரவேற்ற ரஹ்மான்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணமாக வந்துள்ள நிலையில், அவருக்கென சிறப்பு அகிம்சை பாடலொன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் பகிர்ந்தார்.
rehman welcomes trump with Ahimsa song
பின்பு மகாத்மா காந்தி வாழ்ந்த சபர்மதி ஆசிரமத்துக்கு வந்த ட்ரம்புக்கு கதர் சால்வை அணிவிக்கப்பட்டது. இந்நிலையில் அமெரிக்க அதிபரின் வருகையை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் சிறப்புப் பாடல் ஒன்றை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்டார். அதில், 'டொனால்ட் ட்ரம்பை காந்தியின் தேசமான இந்தியாவிற்கு வரவேற்கும் வகையில் எங்களின் வரவேற்பு பாடல்...' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: அருண் விஜய்க்கு வந்த சர்ப்ரைஸ் வாழ்த்து