தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பூஜையுடன் தொடங்கிய ரெஜினா கசாண்ட்ரா அடுத்தகட்ட படப்பிடிப்பு - flash back movie update

நடிகை ரெஜினா கசாண்ட்ரா நடிக்கவுள்ள புதிய படத்தின் பூஜை இன்று (நவ.23) சென்னையில் நடைபெற்றது.

ரெஜினா கசாண்ட்ரா
ரெஜினா கசாண்ட்ரா

By

Published : Nov 23, 2020, 8:17 PM IST

நடிகை ரெஜினா கசாண்ட்ரா தற்போது கசட தபற திரைப்படத்தில் நடித்துவருகிறார். அதைத்தொடர்ந்து தற்போது கொரில்லா பட இயக்குநர் டான் சாண்டி இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அபிஷேக் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் அனுசுயா, உமா ரியாஸ், ஆர்யன் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் பூஜை இன்று (நவ.23) சென்னையில் நடைபெற்றது. அதில் படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர். ’பிளாஷ் பேக்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், இசையமைப்பாளராக சாம்.சி.எஸ். பணியாற்றுகிறார்.

எஸ்.யுவா இப்படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார். விரைவில் இப்படத்தின் கூடுதல் தகவல்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details