'திருடன் போலீஸ்', 'உள்குத்து' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் ராஜூ, நடிகை ரெஜினாவை வைத்து புதியப் படத்தை இயக்கிய வருகிறார். ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்தப் படம் திரில்லர் படமாக உருவாகிறது.
தற்போது இப்படத்திற்கு 'சூர்ப்பனகை' என தலைப்பிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய்சேதுபதி தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி, செங்கோட்டை, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதியில் நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் ரெஜினாவுடன் பிரபல தெலுங்கு நடிகர் வெண்ணிலா கிஷோரும் நடித்து வருகிறார். இதில் ரெஜினா தொல்பொருள் ஆய்வாளராக நடித்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவர் ஸ்டண்ட் காட்சிகளில் டூப் இல்லாமல் தானே நடிக்க பயிற்சி எடுத்து வருகிறார்.
விரைவில் படத்தின் டீஸர், ட்ரெய்லர், வெளியாகும் தேதியை அறிவிக்கும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் தமிழில் 'சூர்ப்பனகை' என்னும் தலைப்பிலும், தெலுங்கில் 'நீநனா' என்னும் தலைப்பிலும் வெளியாகிறது.
இதையும் வாசிங்க: 'ஃபில்டர் காபி அந்த்தே... ஸ்ரீவி. பில்டர் காபி' - சிலாகித்த பிரபல தெலுங்கு நடிகர்