தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மெகா ஸ்டார் படத்தில் ரெஜினாவின் சூப்பர் நடனம் - சிரஞ்சீவி படத்தில் நடனமாடிய ரெஜினா காசண்ட்ரா

தமிழ், தெலுங்கு சினிமாக்களில் ஹீரோயினாக கலக்கி வந்த நடிகை ரெஜினா காசண்ட்ரா, முதல் முறையாக சிறப்புப் பாடலுக்கு சூப்பர் நடனம் ஆடியுள்ளார்.

Regina Cassandra danced for a special celebration song
Actress Regina Cassandra

By

Published : Mar 9, 2020, 11:33 PM IST

ஹைதராபாத்: தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி புதிய படத்தில் நடிகை ரெஜினா காசண்ட்ரா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் கலக்கல் நடிகையாகத் திகழ்கிறார், ரெஜினா காசண்ட்ரா. இவர் தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 152வது படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

#Chiru152 என்ற அழைக்கப்படும் இந்தப் படத்துக்கு ஆச்சார்யா என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கொரட்லா சிவா இயக்குகிறார்.

இதைத்தொடர்ந்து இப்படத்தில் இடம்பெறும் கொண்டாட்ட பாடலுக்கு நடிகை ரெஜினா சூப்பராக நடனம் ஆடியுள்ளாராம். இதுவரை ஹீரோயினாகவே நடித்து வந்த இவர் சிரஞ்சீவியின் படத்தில் முதல் முறையாக சிறப்பான பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

தெலுங்கில் ஏராளமான ரசிகர்களைக் கொண்ட நடிகையாகத் திகழும் ரெஜினா, டோலிவுட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும், இந்தப் படத்தில் நடனமாடியிருப்பது படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தற்போது கார்த்திக் ராஜூ இயக்கத்தில் 'சூர்ப்பனகை', அருண் விஜய் ஜோடியாக இயக்குநர் அறிவழகன் இயக்கும் படம் என பிஸியாக நடித்து வருகிறார், ரெஜி.

'சூர்ப்பனகை' படம் தெலுங்கிலும் உருவாகி வரும் நிலையில், படத்துக்கு 'நேநே நா' என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

ABOUT THE AUTHOR

...view details