தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'ரீகல் டாக்கீஸ்' சர்வதேச ஓடிடி தளத்தை தொடங்கும் பிரபல தயாரிப்பாளர்

சென்னை: ரீகல் டாக்கீஸ் எனும் சர்வதேச ஓடிடி தளத்தை பிரபல தயாரிப்பாளர் சிவி குமார் தொடங்கியுள்ளார்.

சிவி குமரன்
சிவி குமரன்

By

Published : Jul 3, 2020, 7:25 PM IST

கரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களான மால்கள் திரையரங்குகள் இயங்குவதற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்திருந்தது.

இதனால் கடந்த மூன்று மாத காலமாக தமிழ்நாட்டில் எந்த ஒரு படமும் வெளியாகாமல் இருந்தன. இதன் காரணமாக பைனான்ஸில் படம் எடுத்த ஏராளமான தயாரிப்பாளர்கள் வட்டிச் சுமை அதிகரித்ததாலும், திரையரங்குகள் இனி திறக்கப் பட்டாலும் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல்கள் உள்ளதாலும் தங்கள் படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட்டனர்.

ஓடிடி தளத்தில் வெளியிட்ட படங்கள் அனைத்துக்கும் பெரிய லாபம் இல்லாமல் தயாரிப்பு பணிக்கான தொகை மட்டுமே கிடைத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அமேசான், டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஆகிய நிறுவனங்கள் இன்னும் தங்கள் பிடியை இறுக்கியது.

தமிழ்த் திரையைச் சேர்ந்த ஒருவர் கூட ஓடிடி தளம் ஒன்றைத் தொடங்க முன்வரவில்லையே என்ற ஆதங்கம் பலருக்கு எழுந்த நிலையில், 'அட்டகத்தி', 'பீட்சா', 'சூது கவ்வும்', 'தெகிடி' உள்ளிட்ட பல படங்களை தயாரித்த திருக்குமரன் என்டெர்டெயின்மென்ட் பட நிறுவனத்தின் அதிபர், தயாரிப்பாளர், இயக்குநர் சி.வி.குமார் ‘ரீகல் டாக்கீஸ்’ என்ற பெயரில் புதிய ஓடிடி தளத்தை தொடங்கவுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

டிஸ்னி+ஹாட்ஸ்டார், அமேசான், நெட்ஃபிளிக்ஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் ‘ஓவர் தி டாப்’ என வர்ணிக்கப்படும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் திரையிடல் தொழிலில் கொடிகட்டிப் பறக்கின்றன. மில்லியன் டாலர்களில் வருவாய் ஈட்டும் இந்த வெளிநாட்டுத் தளங்களை ஆதரிப்பது தமிழர்கள்தான். ஏனென்றால் வயிறு காய்ந்திருந்தாலும் தங்கள் கண்களுக்கும் கருத்துக்கும் சோறிட அவர்கள் மறப்பதில்லை. அதனால்தான் சினிமா தொழில் தமிழ்நாட்டில் ஆண்டுக்கு குறைந்தது 1,500 கோடி ரூபாய் லாபம் ஈட்டும் சந்தையாக இருந்து வருகிறது.

திரையரங்குகளுக்கு மாற்றாக தமிழ்நாட்டிலிருந்து முதல் சர்வதேச ஓடிடி தளத்தை ஜூலை 8ஆம் தேதி முதல் தொடங்குகிறோம் எனக் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details