காலிடஸ் மீடியா தயாரிப்பில் அறிமுக இயக்குநர் நூர்தீன் இயக்கவுள்ள திரைப்படம் ’ரீல் அந்து போச்சு’. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. படத்தின் கதாநாயகனாக ஆதித் அருண் நடிக்கிறார். சமீபத்தில் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான “24 KISSES” படத்தில் கதாநாயகனாக இவர் நடித்திருந்தார். இந்த படத்திற்கு நந்தா இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக ஓமர் பணிபுரிகிறார்.
'ரீல் அந்து போச்சு' சினிமா கலைஞர்களின் வலிகளை பற்றி பேசும் - ஆதித் அருண் - தமிழ் செய்திகள்
சினிமா கலைஞர்களின் வலிகளை நகைச்சுவை கலந்து சொல்லும் படமாக 'ரீல் அந்து போச்சு' படம் உருவாகி வருவதாக நடிகர் ஆதித் அருண் தெரிவித்துள்ளார்.
படப்பிடிப்பு பூஜையைத் தொடர்ந்து பேசிய நடிகர் ஆதித் அருண். ”இந்தப் படம் எனக்கு தமிழில் ஒரு மறு அறிமுகம் மாதிரிதான். ’இனிது இனிது’, ’தங்க மகன்’ படங்களுக்குப் பிறகு தமிழில் இப்போது தான் நடிக்கிறேன். இந்தப் படம் நிச்சயமாக ஒரு கொண்டாட்ட மனநிலையை ஏற்படுத்தும். முழுக்க முழுக்க காமெடி கலாட்டாக்கள் நிறைந்ததாக இந்தக் கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் நூர்தீன்.
சினிமா தொழிலாளர்கள், கலைஞர்கள் சம்பந்தப்பட்ட படம் இது. அவர்களது வலிகளை நகைச்சுவை கலந்து சொல்ல முயற்சி செய்திருக்கிறோம். கண்டிப்பாக எல்லோரையும் மகிழ்விக்கும் படமாக இப்படம் இருக்கும்” என்றார்.