தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

எனக்கா ரெட் கார்டு - சிம்புக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் - simbu red card

நடிகர் சிம்புக்கு விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் நீக்கியுள்ளது.

சிம்பு
சிம்பு

By

Published : Aug 26, 2021, 11:13 AM IST

Updated : Aug 26, 2021, 11:33 AM IST

நடிகர் சிம்பு நடிப்பில் 2017ஆம் ஆண்டு வெளியான திரைப்படம், ’அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’. இப்படத்தின் படப்பிடிப்பிற்கு சிம்பு சொன்ன நேரத்தில் கலந்துகொண்டு படத்தில் நடிக்காத காரணத்தினால், தனக்கு இழப்பு ஏற்பட்டது எனக் கூறி படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார்.

இவர் மட்டுமின்றி கோலிவுட்டில் சிம்புவின் கடந்த கால செயல்பாடு காரணமாக நான்கு தயாரிப்பாளர்கள், தங்களது பிரச்னைகளை சிம்பு தீர்க்கும்வரை படங்களில் நடிக்க தடை விதிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கு (பெப்சி) கோரிக்கை வைத்தனர்.

அக்கோரிக்கையை ஏற்ற பெப்சி அமைப்பு, சிம்புவிற்கு ரெட் கார்டு கொடுத்து அவர் நடித்துவரும், 'வெந்து தணிந்தது காடு' படத்தின் படப்பிடிப்புக்குத் தடை விதித்தனர். இதனால் சிம்பு ரசிகர்கள் மிகவும் சோகத்தில் இருந்தனர்.

இவ்விவகாரம் குறித்து சமீபத்தில் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதில் கலந்துகொண்டு சிம்புவின் தாய் உஷா ராஜேந்தர் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்குப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். இதனை ஏற்ற பெப்சி நிறுவனம் சிம்புவுக்கு விதித்த ரெட் கார்டை நீக்கியது.

வெந்து தணிந்தது காடு

இதனால் அவர் நடித்துவந்த, ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி இன்று (ஆகஸ்ட் 26) சென்னையில் தொடங்கியது.

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், சிம்பு மீது தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருப்பதால், அதனை நீதிமன்றம் முடிவுசெய்யும் எனத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் சிம்பு கொடுக்க வேண்டிய பணத்திற்குத், தான் பொறுப்பு எற்றுக்கொள்வதாக ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் முன்வந்துள்ளார். அதனால்தான் சிம்புவுக்கு விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டு நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இரும்பு கை மாயாவி: சூர்யா - லோகேஷ் கூட்டணி

Last Updated : Aug 26, 2021, 11:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details