தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இனி எல்லாமே டிஸ்னிதான்... மார்வெல் தொகுப்பு அறிமுகம்! - மார்வெல் தொகுப்பு அறிமுகம்

மும்பை: மார்வெல் பிரியர்களுக்காக பவர் பேங்க், சார்ஜர்கள், ஸ்பீக்கர்கள், ஹெட்ஃபோன்கள், ஹேர் ட்ரையர்கள் உள்ளிட்ட ஸ்பெஷல் டிஸ்னி சாதனங்கள் சந்தையில் அறிமுகமாகியுள்ளன.

டிஸ்னி
டிஸ்னி

By

Published : Nov 27, 2020, 12:05 PM IST

மார்வெல் திரைப்படத்திற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை பெரும் வரவேற்பு உள்ளது. குறிப்பாக, மார்வெல்லின் அவெஞ்சர்ஸுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்நிலையில், மார்வெல் பிரியர்களுக்காக பவர் பேங்க், சார்ஜர்கள் உள்ளிட்ட ஸ்பேஷல் டிஸ்னி சாதனங்கள் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

டிஸ்னி மார்வெல் - ஃபேன் அட் ஹார்ட்” தொகுப்பு

"டிஸ்னி மார்வெல் - ஃபேன் அட் ஹார்ட்” தொகுப்பை சந்தையில் அறிமுகப்படுத்துவதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு பவர் பேங்க், சார்ஜர்கள், ஸ்பீக்கர்கள், ஹெட்ஃபோன்கள், ஹேர் ட்ரையர்கள், டோஸ்டர்கள் என 160 க்கும் மேற்பட்ட டிஸ்னி மற்றும் மார்வெல் சாதனங்கள் அடங்கியுள்ளது. இந்தத் தொகுப்பின் மூலம், மக்களிடம் டிஸ்னி குறித்து எதிர்பார்ப்பை மீண்டும் ஏற்படுத்த நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த தொகுப்பு ரூபாய் 249 முதல் விற்பனை செய்யப்படுகிறது. இது எலக்ட்ரானிக் ஸ்டோர்ஸ், பல்பொருள் அங்காடிகள் மற்றும் பொம்மை கடைகளில் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும், ஆன்லைனில் www.reliancedigital.in இணையத்திலும் வாங்கிக்கொள்ளலாம். இந்தப் புதிய முயற்சி இந்தியா முழுவதும் உள்ள 7 மில்லியன் ரசிகர்களை மீண்டும் மார்வெல்லுடன் இணைக்கும் திட்டமாக பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details