'பிகில்' திரைப்படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்திருந்தார் ரெபா மோனிகா ஜான். இவர் சென்ற ஆண்டு நடிகர் ஜெய்க்கு ஜோடியாக 'ஜருகண்டி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
ஆனால் 'பிகில்' படத்தில் நடித்தபின்புதான், தமிழில் அவருக்கு வரவேற்பு கிடைத்தது. தற்சமயம் ஹரீஷ் கல்யாணுடன் 'தனுசு ராசி நேயர்களே', விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக 'FIR ஃபைசல் இப்ராஹிம் ரய்ஸ்' போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.