தனுஷ் நடிப்பில் கடந்தாண்டு வெளியான 'மாரி 2' திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தவர் மலையாள நடிகர் டொவினோ தாமஸ். மலையாள திரையுலகில் முக்கிய நடிகராக திகழும் டொவினோ தாமஸ் ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான வேடங்களை ஏற்று நடித்துவருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான லூசிப்பர், வைரஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய கவனத்தை ஈர்த்தன.
டொவினோ தாமஸின் 'ஃபாரன்சிக்' டீஸர் வெளியீடு! - ஃபாரன்சிக் டீஸர்
டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகி வரும் 'ஃபாரன்சிக்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
இதனிடையே, டொவினோ தாமஸ், மம்தா மோகன் தாஸ், ரெபா மோனிக்கா ஜான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகிவரும் கிரைம் த்ரில்லரான ஃபாரன்சிக் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலையை துப்பு துளக்கும் ஐபிஎஸ் அதிகாரியாக மம்தாவும் அவருக்கு உதவிபுரியும் ஃபாரன்சிக் அதிகாரியாக டொவினோ தாமஸும் இதில் நடித்துள்ளனர். அகில் பால், அனாஸ் கான் ஆகியோர் இயக்கும் இப்படத்தை ஜுவிஸ் புரடெக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
நேற்று டொவினோ தாமஸ் பிறந்தநாளை முன்னிட்டு டீசரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. இப்படம் மார்ச் மாதம் வெளியாக உள்ளது.