கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம் சூரரைப் போற்று. இத்திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனத்தில் பொம்மியாகப் பதிந்தவர் அபர்ணா பாலமுரளி. கேப்டன் கோபிநாத்தின் மனைவி பாத்திரத்தில் நடித்த இவர் திரைப்படத்தில் பொம்மி பேக்கரி உரிமையாளராக நடித்திருந்தார்.
இன்று ரியல் பொம்மி பேக்கரியான பன் வேர்ல்ட் ஐயங்கார் பேக்கரி 25 ஆண்டுகளை நிறைவுசெய்து வெள்ளி விழாவைக் கொண்டாடுகிறது. இதன் உரிமையாளரான தனது மனைவிக்கு வாழ்த்து தெரிவித்து கேப்டன் கோபிநாத் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.