நடிகர் ரவி தேஜா, இயக்குநர் கோபிசந்த் மலினேனி கூட்டணியில் வெளியாகி ஹிட் அடித்த இரு படங்கள் 'டான் சீனு' மற்றும் 'பலுபு'. இந்த இரு படங்களைத் தொடர்ந்து இருவரும் மீண்டும் இணையும் புதிய திரைப்படத்துக்கு 'க்ராக்' என பெயரிடப்பட்டுள்ளது.
ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் காலை வெளியாகியது. இதனை நடிகர் ரவி தேஜா, குழந்தைகள் தினமான இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பும் இன்று தொடங்கியது. இப்படத்தில் கரடு முரடான போலீஸ் அதிகாரியாக ரவி தேஜா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்.