கன்னடத்தில் வெளியான 'கேஜிஎஃப்' திரைப்படம் தென்னிந்தியா மட்டுமின்றி, இந்தியா முழுவதிலும் உள்ள ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. பிரசாந்த் நீல் இயக்கியிருந்த, இப்படத்தில் கன்னட நடிகர் யாஷ், ஆக்சன் காட்சிகளில் மாஸ் காட்டியிருப்பார்.
1970களில் கோலார் தங்கச் சுரங்கத்தில், ஏழை மக்களை அடிமையாக நடத்தும் வில்லனை கொலை செய்வதற்காக உள்ளே செல்லும் கதாநாயகன், வில்லனை எப்படிக் கொன்றார், அங்குள்ள மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பது போன்று கதை அமைக்கப்பட்டிருக்கும்.
தமிழில் இத்திரைப்படத்தை விஷாலின் விஎஃப்எஃப் நிறுவனம் வெளியிட்டது. தமிழிலும் இத்திரைப்படம் ஹிட் அடித்தது. இதனால் யாஷ் தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம்பிடித்தார். சமீபத்தில் 'கேஜிஎஃப்' திரைப்படத்திற்கு அதிரடி காட்சி அமைப்புகள் மற்றும் சிறப்புக் காட்சி ஆகிய இரு பிரிவுகளின் கீழ், தேசிய விருது வழங்கப்பட்டது