ஹைதராபாத்: விஷ்ணு விஷாலின் சினிமா கேரியரில் வெண்ணிலா கபடிகுழு திருப்பு முனையாக அமைந்தது. நீர்ப்பறவையும் அவருக்கு ரசிகர் கூட்டத்தை பெற்றுக்கொடுத்தது.
விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் காவல் துறை உயரலுவலர் ஆவார். தனது தொடக்க கல்வியை திருச்சி கேம்பியன் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற விஷால், எம்பிஏ படிப்பை சென்னையில் முடித்தார்.
தொடக்க காலத்தில் விஷாலுக்கு கிரிக்கெட் மீது தீராக் காதல் இருந்தது. ஒரு கிரிக்கெட் வீரராகவே விரும்பினார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பாக நடைபெறும் விளையாட்டுகளிலும் பங்கெடுத்துள்ளார்.
ஒருமுறை கிரிக்கெட் விளையாடும் போது காலில் காயம் ஏற்பட்டது. அந்தக் காயம் கொடுத்த ஓய்வின்போது, விஷால் தொடர்ச்சியாக சினிமா படங்களை பார்த்துவந்தார். அப்போது அவருக்கு சினிமா மீது ஆர்வம் ஏற்பட்டது, தொடர்ந்து சினிமா நடிப்புத்துறையில் கால்பதிக்க திட்டமிட்டார். அப்போது விஷாலின் தந்தை வழி மாமா பக்கபலமாக இருந்தார்.
ஆனந்த் சக்ரவர்த்தியாக வாழ்ந்த விஷ்ணு விஷால் அவர் சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். சினிமாவுக்குள் வந்ததும் தனது பெயருடன் விஷ்ணு என்பதை இணைத்துக்கொண்டார் விஷால். இந்நிலையில், இவருக்கு சுசீந்திரனின் இயக்கத்தில் வெண்ணிலா கபடிகுழு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இந்தப் படத்துக்காக கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கடினமாக உழைத்தார். படத்தில் ஆனந்த் சக்ரவர்த்தியாகவே வாழ்ந்தார். ரசிகர்களின் பேராதர்வையும் பெற்றார். தொடர்ந்து அவருக்கு விஜய்யின் சிறந்த அறிமுக கதாநாயகன் விருதும் கிடைத்தது.
பின்னர் பலே பாண்டியா, துரோகி, குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதில் குள்ளநரிக் கூட்டம், வெற்றி ரசிகர்களால் பேசப்பட்டார். இவரின் கேரியரில் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்த நீர்ப்பறவை 2012இல் வெளியானது. அதில், அருளப்ப சுவாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.
இது ரசிகர்களிடையே மீண்டும் அவருக்கு நற்பெயரை பெற்றுக்கொடுத்தது. நீர்ப்பறவை தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டது.
எஃப்.ஐ.ஆர். படத்தில் விஷால் அடுத்து முண்டாசுபட்டி கோபியும் விஷ்ணு விஷாலின் நடிப்புக்கு நல்லதொரு தீனியாக அமைந்தது. தொடர்ந்து வெளியான ராட்சசன் படம் விஷாலை முன்னணி கதாநாயகனாக உயர்த்தியது. அவர் ஏற்று நடித்த அருண் குமார் என்ற காவலர் கதாபாத்திரம் அவரை ஆக்ஷன் ஹீரோவாக உயர்த்தியது.
இந்தப் படம் தெலுங்கு உள்பட வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு உருவாகிவருகிறது.
ஜூவாலா கட்டா- விஷ்ணு விஷால் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படம் விஷாலை ஜனரஞ்சக ஹீரோவாக காட்டியது. அடுத்து இவரின் நடிப்பில் ஆரண்யா (காடன்), எஃப்.ஐ.ஆர் உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன. விஷ்ணு விஷால் ஜூவாலா கட்டா திருமணம் 2021 ஏப்ரலில் நடைபெற்றது.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் விஷ்ணு விஷாலுக்கு பிரபல இயக்குனர்கள், நடிகர்கள் எனப் பலரும் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். ராட்சசனுக்கு ஈடிவி பாரத் சார்பில் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.!
இதையும் படிங்க : கவர்ந்திழுக்கும் இடையழகி கத்ரீனா கைஃப்!