'முண்டாசுப்பட்டி' திரைப்படத்திற்கு பிறகு ராம்குமார் இயக்கிய 'ராட்சசன்' திரைப்படம் பெரும் வெற்றிபெற்றது. திரில்லர் ஜானரில் விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் உருவான 'ராட்சசன்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. முதலில் படம் வெளியானபோது எதிர்பார்த்த வரவேற்பு இல்லாவிட்டாலும், பின்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 'ஜீவா' திரைப்படத்திற்கு பிறகு விஷ்ணு விஷால் நடித்த 'ராட்சசன்' படம் வெற்றியை பெற்றுத்தந்தது.
இந்நிலையில் 'ராட்சசன்' படத்திற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் ஃபிலிம் அவார்ட்ஸ் (Los Angeles Film Awards 2019) நான்கு விருதுகளை அளிக்கவுள்ளது. சிறந்த படம், சிறந்த திரில்லர், சிறந்த நடிகர், சிறந்த பின்னணி இசை ஆகிய நான்கு பிரிவுகளில் தேர்வாகியுள்ளது. முன்னதாக லாட்கா விருதினை (Los Angeles Theatrical release Competition Award) 'ராட்சசன்' திரைப்படம் பெற்றது குறிப்பிடத்தக்கது.