நடிகை ஜோதிகா திருமணத்திற்கு பிறகு நீண்ட வருடங்களுக்கு பிறகு நடித்த படம் '36 வயதினிலே'. அப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுத்தவர், பெண்களை மையப்படுத்தும் கதைகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் தேர்வு செய்யும் படங்களும் ரசிகர்கள் மத்தியிலும், பெண்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அது மட்டுமின்றி படக்குழுவினருக்கும் நல்ல வசூலையும் ஈட்டித் தருகிறது. அதன் வரிசையில் ஜோதிகா நடிப்பில் அடுத்து வெளியாகும் 'ராட்சசி' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
'தப்பு பண்ணாதான் பயப்படனும்..!' - மிரட்டும் 'ராட்சசி' ஆசிரியை கீதா ராணி! - அரசியல்
ஆசிரியராக, அரசியல் பேசுபவராக, நேர்மையானவராக களம் இறங்கியுள்ள கீதா ராணியின் 'ராட்சசி' ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
!['தப்பு பண்ணாதான் பயப்படனும்..!' - மிரட்டும் 'ராட்சசி' ஆசிரியை கீதா ராணி!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3436325-thumbnail-3x2-ratchasi.jpg)
ratchasi
படத்தில் ஜோதிகா அசத்தல் கெட்டப்பில் ஆசிரியர் கீதா ராணியாக வருகிறார். ஆசிரியர் மட்டுமல்லாது அரசியல், நேர்மை, பள்ளிக்கூடம் என அனைத்தையும் ஒன்றிணைத்து கேரக்டரை வடிவமைத்துள்ளார் இயக்குநர் கௌதம்ராஜ். படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரகாஷ் பிரபு மற்றும் பிரபு இணைந்து தயாரித்துள்ளனர். விரைவில் படம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.