தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'அசுரன்' படத்தில் இணையும் 'ராட்சசன்' அபிராமி! - வெற்றிமாறன்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் 'அசுரன்' படத்தில் அபிராமி இணைகிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

asuran

By

Published : Aug 16, 2019, 6:22 AM IST

'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'வடசென்னை' படங்களைத் தொடர்ந்து தனுஷ்-வெற்றிமாறன் காம்போவில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் 'அசுரன்'. இவர்களது வெற்றிக் கூட்டணி இந்திய அளவில் பிரபலம். ‘ஆடுகளம்’ திரைப்படம் ஆறு தேசிய விருதைப் பெற்று இந்திய திரையுலகத்தினர் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 'அசுரன்' திரைப்படம் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் இசையில் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகவுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதில் தனுஷூக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

'ராட்சசன்' பாப்பா

இந்நிலையில் 'ராட்சசன்' படத்தில் நடித்த அபிராமி, 'அசுரன்' படத்தில் இணைந்துள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details