தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நான் நடிகையான பிறகு என் அப்பா அதிகம் சினிமா பார்ப்பதில்லை - ராஷ்மிகா - விஜய்யின் கில்லி திரைப்படம்

முதன் முதலில் திரையரங்கில் பார்த்த திரைப்படம் குறித்து இளம் நடிகை ராஷ்மிகா ரசிகர்களிடையே உரையாடியுள்ளார்.

Rashmika
Rashmika

By

Published : May 18, 2020, 1:06 PM IST

கன்னடத் திரையுலகில் 'கிரிக் பார்ட்டி' படத்தின் மூலமாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தன்னா. பின்னர் 'கீதா கோவிந்தம்' படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்ததன் மூலம் தெலுங்கு மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். சமீபத்தில் மகேஷ் பாபுவுடன் 'சரிலேரு நீக்கேவரு' படத்தில் நடித்திருந்தார்.

தற்போது அல்லு அர்ஜூன் நடிப்பில் இந்திய பன்மொழி திரைப்படமாக உருவாகி வரும் 'புஷ்பா' நடத்தில் நடித்து வருகிறார். இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'சுல்தான்' படத்திலும் நடித்து வருகிறார்.

தற்போது ஊரடங்கால் வீட்டில் இருக்கும் ராஷ்மிகா சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களிடையே உரையாடிவருகிறார். அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் தியேட்டரில் பார்த்த முதல் திரைப்படம் எது என கேட்டார்.

அதற்கு அவர், " 'கில்லி' படதத்துக்கு என்னை எனது தந்தை அழைத்து சென்றதாக ஞாபகம். அது பற்றி அவரிடம் கேளுங்கள். முன்பெல்லாம் அவர் அதிகம் சினிமா பார்ப்பவராக இருந்தார். நான் நடிகையான பிறகு அவர் அப்படிப் பார்ப்பதில்லை" என்று பதிலளித்தார்.

ராஷ்மிகா விஜய்யின் தீவிர ரசிகை என்பது தெரிந்த விஷயமே. விஜய் நடித்த கில்லி படத்தைப் பார்த்ததாக ராஷ்மிகா கூறியதற்கு மகிழ்ச்சி தெரிவித்திருக்கும் விஜய் ரசிகர்கள் சீக்கிரம் தளபதியுடன் இணைந்து நடியுங்கள் அந்த காம்போவை பார்க்க ஆசைப்படுகிறோம் என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வடிவேலுவை காப்பி அடித்த போட்டோக்களுக்கு ராஷ்மிகாவின் க்யூட் பதில்!

ABOUT THE AUTHOR

...view details