கரோனா ஊரடங்கு காரணமாகப் பலரும் வீட்டில் என்ன செய்வது என்றே தெரியாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்காக நடிகை ராஷ்மிகா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “என்னிடம் என்னுடைய நண்பர் ஒரு முறை சொன்னதை உங்களிடம் சொல்ல விரும்புகிறேன். உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயத்தில் நேரத்தைச் செலவிடுங்கள். அது பணம், அறிவு எதுவாக இருந்தாலும் சரி” என பதிவிட்டுள்ளார்.