தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அமிதாப் பச்சனுடன் பணியாற்றுவது பதற்றமாக உள்ளது - 'குட்பை' ராஷ்மிகா! - குட்பை

ஹைதராபாத்: 'பாலிவுட் பிக் பி' அமிதாப் பச்சனுடன் நடிப்பது பதற்றம் கலந்த உற்சாகம் இருப்பதாக நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

Rashmika Mandanna
Rashmika Mandanna

By

Published : Apr 4, 2021, 9:18 AM IST

கன்னடத் திரையுலகின் வழியே அறிமுகமாகி, தற்போது தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம்வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் ’கீதா கோவிந்தம்’ படத்தில் நடித்ததைத் தொடர்ந்து பெரும் பிரபலமடைந்த ராஷ்மிகா, தொடர்ந்து தெலுங்கில் வெற்றிகரமான நாயகியாக வலம் வந்துகொண்டுள்ளார். அதுமட்டுமின்றி இந்திய அளவில் தனது சுட்டித்தனமான முக பாவனையால் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், ராஷ்மிகா மந்தனா கங்கனா நடிப்பில் வெளிவந்த வெற்றிப் படமான 'குயின்' படத்தின் இயக்குநர் விகாஸ் பால், அமிதாப் பச்சனை வைத்து இயக்கும் 'குட்பை' படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சுதாகர் ரெட்டி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தை பாலாஜி டெலிஃபிலிம்ஸ் - ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கிறது. தந்தை-மகளுக்கு இடையேயான உறவு குறித்தும், ராஷ்மிகா கதாபாத்திரத்தின் சுய தேடல் குறித்தும் இப்படத்தின் கதை அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமிதாப் பச்சனுடன் பணியாற்றுவது சற்று பதற்றம் கலந்த உற்சாகத்துடன் இருப்பதாக ராஷ்மிகா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, "அமிதாப் பச்சனுடன் பாலிவுட்டில் இவ்வளவு சீக்கிரம் இணைந்து பணியாற்றுவேன் என எதிர்பார்க்கவில்லை. இதற்கு நான் குட்பை படக்குழுவினருக்கு நன்றிக்கடன்பட்டுள்ளேன்.

அமிதாப்புடன் பல விஷயங்களைக் கற்றுக்கொள்வேன். மேலும் பல நினைவுகளை உருவாக்குவேன் என நம்புகிறேன். அமிதாப்புடன் பணியாற்றுவது எனக்குச் சற்று பதற்றம் கலந்த உற்சாகம் உள்ளது. இந்த வாய்பை நான் தவறவிட மாட்டேன். சரியாகப் பயன்படுத்திக்கொள்வேன்" என்று கூறினார்.

ராஷ்மிகா பாலிவுட்டில் முதல் படமாக சித்தார்த் மல்ஹோத்ராவுடன் 'மிஷன் மஜ்னு' என்னும் படத்தில் நடித்துவருகிறார். 'குட்பை' (Goodbye) அவருக்கு இரண்டாவது படமாகும். தற்போது பாலிவுட்டிலிருந்து ராஷ்மிகாவுக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து வருவதையடுத்து மும்பையில் வீடு வாங்கி அதில் வசித்துவருகிறார்.

ABOUT THE AUTHOR

...view details