தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விஜய் தேவரகொண்டாவை சந்திக்க அமெரிக்கா செல்லும் ராஷ்மிகா? - ராஷ்மிகா மந்தனாவின் படங்கள்‘

நடிகர் விஜய் தேவரகொண்டாவை சந்திப்பதற்கு நடிகை ராஷ்மிகா மந்தனா அமெரிக்கா சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

v
v

By

Published : Nov 24, 2021, 7:53 PM IST

பாலிவுட்டில் நடிகை ராஷ்மிகா மந்தனா 'மிஷன் மஜ்னு', அமிதாப் பச்சனுடன் 'குட்பை' போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்தியில் ராஷ்மிகாவுக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் வருவதால் மும்பையில் தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளார்.

இந்நிலையில், ராஷ்மிகா சமீபத்தில் விடுமுறை கொண்டாட வெளிநாடு சென்றுள்ளார். முன்னதாக ராஷ்மிகா தனது சமூகவலைதளப்பக்கத்தில், நான் ரொம்ப தொலைவில் செல்கிறேன். ஆனால் விரைவில் திரும்பி வருவேன் என்ற கேப்சனுடன் பாஸ்போர்ட் உடன் விமான டிக்கெட் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.

ராஷ்மிகா மந்தனா இன்ஸ்டா ஸ்டோரி

அதைத்தொடர்ந்து விமான இருக்கையில் இருந்தப்படி செல்ஃபியை பகிர்ந்த ராஷ்மிகா நான் எங்கு செல்கிறேன் என யூகிக்குமாறு தனது சமூகவலைதளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதைப்பார்த்த ரசிகர்கள், ராஷ்மிகா அமெரிக்கா சென்றிருப்பதாக தங்களது யூகங்களை சமூகவலைதளப்பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். காரணம் அமெரிக்காவில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் 'லீகர் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. எனவே அங்கு சென்று விஜய் தேவரகொண்டாவை சந்திப்பார் என்றனர்.

முன்னதாக 'லீகர்' படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்ற போது ராஷ்மிகா அங்கு சென்று விஜய் தேவரகொண்டாவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சமூக வலைதளப்பக்கத்தில் மாஸ் காட்டி கெத்தாக நிற்கும் ராஷ்மிகா!

ABOUT THE AUTHOR

...view details