சென்னை: வடிவேலுவுடன் தன்னை ஒப்பிடவேண்டாம் என்று தனது போட்டோஷூட் புகைப்படங்களின் மீம்ஸ்களுக்கு லவ் எமோஜியுடன் கருத்து பதிவிட்டுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா.
தமிழில் எந்தப் படங்களிலும் இதுவரை நடிக்காத நிலையிலும், கோலிவுட் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஹீரோயினாக இருக்கிறார் தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா. 'கீதா கோவிந்தம்' என்ற படத்தில் இடம்பெறும் 'இன்கெம் இன்கெம் காவாலி' பாடல் மூலம் ரசிகர்களை கொள்ளைகொண்ட இவர், தெலுங்கு சினிமாவில் வளர்ந்துவரும் ஹீரோயினாக உள்ளார்.
இதையடுத்து, குறும்புத்தனமான முக பாவனைகளுடன் பல்வேறு போஸ்களில் புகைப்படம் எடுத்து சமீபத்தில் போட்டோஷூட் ஒன்றை நிகழ்த்தினார் ராஷ்மிகா. இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டன.
இதைப் பார்த்து ராஷ்மிகாவின் க்யூட்டான முக பாவனைகளை, நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் முக பாவனைகளோடு ஒப்பிட்டு மீம் கிரியேட்டர்கள் வரிசை கட்டி மீம்ஸ்களை வெளியிட்டனர்.
Rashmika Mandanna vaivelu version memes ராஷ்மிகாவின் ஒவ்வொரு முக பாவனைக்கும், வடிவேலு தனது காமெடி காட்சிகளில் வெளிக்காட்டிய வித்தியாசமான முக பாவனைகளை இணைக்கப்பட்டிருக்கும் அந்த மீம்ஸ்கள் #VadiveluForLife என்ற ஹேஷ்டேக்கில் வைரலானது.
Rashmika Mandanna vaivelu version memes இந்த மீம்ஸ் புகைப்படங்கள் ராஷ்மிகா கவனத்துக்குச் சென்ற நிலையில், ”என்னை வடிவேலுவுடன் ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ளமாட்டேன். குரங்கு போன்ற லுக்கில் அவர் என்னைவிட மிகவும் க்யூட்டாக இருக்கிறார்” என்று லவ் எமோஜியுடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கார்த்தி ஜோடியாக 'சுல்தான்' என்ற ரொமாண்டிக் திரைப்படம் மூலம் தமிழத் திரையுலகில் அறிமுகமாகவுள்ளார் ராஷ்மிகா. இந்தப் படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்துக்கு முன்னரே தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் ராஷ்மிகாவை நடிக்கவைக்க முயற்சி நடைபெற்றது. ஆனால் கால்ஷீட் பிரச்னை காரணமாக வாய்ப்பு பறிபோனது.
இதையும் படிங்க: 'இவரா இப்படி செஞ்சது' - ராஷ்மிகா வீட்டில் வருமான வரிச்சோதனை