இயக்குநர் லிங்குசாமி 'சண்டைக்கோழி 2' படத்தைத் தொடர்ந்து வேறு எந்தப் படமும் இயக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில், தற்போது தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.
இப்படத்தில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு '#RAPO19' என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அன்பறிவு சண்டை இயக்குநராக பயணியாற்றவுள்ளார்.
ஸ்ரீனிவாசா சிட்டூரி தயாரிக்கும் இப்படம், தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தின் தமிழ்நாடு உரிமையை ‘மாஸ்டர் பீஸ்’ நிறுவனம் பெற்றுள்ளது.