கடந்த 1983 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி முதல் முறையாக உலகக் கோப்பை வென்ற கதையை அடிப்படையாகக் கொண்டு '83' என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் அப்போதைய கேப்டன் கபில் தேவ் வேடத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ளார். கபில் தேவின் மனைவி கேரக்டரில் ரன்வீர் மனைவியும், நடிகையுமான தீபிகா படுகோனே நடித்துள்ளார்.
இதேபோல் அத்தொடரில் இந்திய அணியில் விளையாடிய தமிழ்நாட்டு வீரரான ஸ்ரீகாந்த் வேடத்தில் கோலிவுட் நடிகர் ஜீவா நடித்துள்ளார். '83' படத்தின் தமிழ் பதிப்பின் உரிமையை கமல் ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் பெற்றுள்ளது. இந்த படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் கைப்பற்றியது.